புதுச்சேரி

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம்: பொதுமக்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!

புதுச்சேரி, செப். 12:
புதுச்சேரி காவல் துறையில் டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் இன்று சிறப்பு மக்கள் மன்றம் நடைபெற்றது.

காலாப்பட்டு காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்திற்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி யரகட்டி மற்றும் கிழக்கு காவல் சரகத்திற்குட்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதேபோல் வடக்கு சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்கள் சார்பில் கோரிமேடு காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி தலைமையிலும், மேற்கு சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் சார்பில் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலும் மக்கள் மன்றக் கூட்டங்கள் நடைபெற்றன.

மேலும் புதுச்சேரி மட்டுமின்றி ஏனாம் பிராந்தியத்தில் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் வரதராஜன் தலைமையிலும், மாஹே பிராந்தியத்தில் பந்தக்கல் புறக்காவல் நிலைய காவல் கண்காணிப்பாளர் தனசேகரன் தலைமையிலும் மக்கள் மன்றம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த மக்கள் மன்றக் கூட்டங்களில் பெறப்பட்ட பெரும்பாலான புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன