தேசியம்

ஸ்ரீநகரில் முதலாவது சர்வதேச திரைப்பட விழா: ஒமர் அப்துல்லாவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச திரைப்பட விழாவின் (IFFJK 2026) தொடக்க நிகழ்வில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு மகத்தான தொடக்கமாக இந்த சர்வதேச திரைப்பட விழா அமைந்துள்ளது என்று பாராட்டினார். மேலும், ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தின் சினிமா வாய்ப்புகள் மற்றும் கலைத்திறனை உலக அளவில் காட்சிப்படுத்த இது ஒரு சிறந்த பாலமாகத் திகழும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற சர்வதேச கலை விழாக்கள் திரைப்பட சூழலை மேலும் வலுப்படுத்துவதுடன், ஜம்மு – காஷ்மீரை உலகத் தரம் வாய்ந்த திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரைப்பட சுற்றுலா தலமாக மாற்றவும், உள்ளூர் கலைஞர்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கவும் வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன