தேசியம்

9/11 பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்: பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா என்றும் உறுதியாக நிற்கும் – பிரதமர் நரேந்திர மோடி பதிவு!

புது தில்லி: அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினத்தை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “9/11 பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நாம் நினைவுகூர்கிறோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, வாழ்க்கை முற்றிலுமாக மாறிய குடும்பத்தினருக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாடான இந்தியா, பயங்கரவாதத்தின் எந்தவொரு வடிவத்தையும் எதிர்ப்பதில் அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு தாம் அமெரிக்கா சென்றிருந்தபோது, நியூயார்க்கில் உள்ள 9/11 நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு (9/11 Memorial & Museum) நேரில் சென்று மரியாதை செலுத்திய அரிய புகைப்படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன