அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநராக தினேஷ் சர்மா நியமனம்
புதுடெல்லி:
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் புதிய துணை நிலை ஆளுநராக (Lieutenant Governor), பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச அரசியலில் முக்கியத் தலைவராக விளங்கும் தினேஷ் சர்மா, அம்மாநிலத்தில் துணை முதல்வராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை அவரை அந்தமான் – நிகோபார் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபாரின் நிர்வாகப் பணிகள், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் முக்கியப் பொறுப்பை இவர் ஏற்கவுள்ளார். விரைவில் அவர் முறைப்படி துணை நிலை ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு தனது பணிகளைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



