இந்தியாவின் உலகளாவிய நன்மதிப்பை உயர்த்தும் பெரும் சக்தி வெளிநாடு வாழ் இந்தியர்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம்!

சிகாகோ: இந்தியாவின் ஆற்றலையும் உலகளாவிய நன்மதிப்பையும் சர்வதேச அளவில் உயர்த்தும் பெரும் சக்தியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் திகழ்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது கடின உழைப்பு, தொழில்சார் திறன், அறிவு மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழையும் பெருமையையும் தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர் என்று பாராட்டினார்.
மேலும், சர்வதேச தளங்களில் இந்தியாவின் ஆற்றல்மிக்க தூதுவர்களாகத் திகழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய நல்லுறவை மேம்படுத்துவதற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.



