புதுச்சேரி

கட்டேரிக்குப்பத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா: கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கட்டேரிக்குப்பம் பகுதியில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாள் விழா கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் கென்னடி, முத்து மற்றும் அன்பு ஆகியோர் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாக வாழ்த்துகளுக்கு இடையே கேக் வெட்டித் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து, பிறந்தநாள் விழாவையொட்டி அப்பகுதி பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அமைச்சருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன