தமிழ்நாடு
சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை, அக்டோபர் 20: சென்னையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று பகலில் விட்டுவிட்டு திடீரென மழை பெய்யக்கூடும் என்று எல்லினோ தாக்க ஆய்வு குழு உறுப்பினர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மாலையில் தீவிரமடையும் மழை இரவு முழுவதும் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.