தமிழ்நாடு
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களால் இருவர் உயிரிழப்பு பொதுமக்கள் சீரமைக்க கோரிக்கை
சேலம், அக்டோபர் 20: சேலம் ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் ஒரே வாரத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த ஒரு மாதத்தில் 50 பேர் காயமடைந்திருக்கும் நிலையில், சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.