புதுச்சேரி ஜிப்மரில் ஐசிஎம்ஆர் திட்டப் பணிகள்: கைநிறைய சம்பளத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் கீழ் இயங்கும் ஐசிஎம்ஆர் (ICMR) ஆராய்ச்சி திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் திட்ட விஞ்ஞானி-I (மருத்துவம்) 4 இடங்கள் (மாத சம்பளம் ₹67,000 + 20% HRA), திட்ட விஞ்ஞானி-II (தரவு மேலாளர், தகவல் தொழில்நுட்ப மேலாளர், புள்ளியியல் நிபுணர்) தலா 1 இடம் (மாத சம்பளம் ₹67,000 + 20% HRA), திட்ட விஞ்ஞானி-III (மருத்துவம்) 1 இடம் (மாத சம்பளம் ₹93,000 + 20% HRA) நிரப்பப்பட உள்ளன. மேலும், திட்ட தொழில்நுட்ப உதவியாளர்-II பிரிவில் நிர்வாக உதவியாளர், அரசு தொடர்பு அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்-III பிரிவில் ஐடி ஆதரவு, தரவு ஆதரவு (மாத சம்பளம் ₹28,000 + 20% HRA) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணிகள் அனைத்தும் அதிகபட்சமாக 48 மாத கால ஒப்பந்த அடிப்படையில் அமையவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய சான்றிதழ்களுடன் preglink@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இறுதித் தேர்வு நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



