புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: குண்டுபாளையத்தில் திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கழக வேட்பாளர் கு. சேது (எ) சேது செல்வத்திற்கு ஆதரவாக குண்டுபாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

இன்று காலை தொகுதிக்குட்பட்ட குண்டுபாளையம் பகுதியில், விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எல். லட்சுமணன் மற்றும் உருளையன்பேட்டை எஸ். கோபால் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது வேட்பாளர் சேது செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்தத் தேர்தல் பிரச்சார நிகழ்வில் காலப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் செந்தில், வானூர் சட்டமன்ற உறுப்பினர் கெளதம் திராவிடமானி, உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன