காரைக்கால்

நிரவி பகுதியில் மழைக்காலத்திற்குள் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்எல்ஏ டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் அறிவுறுத்தல்!

காரைக்கால், நிரவி பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து சாலைப் பணிகளையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே விரைந்து முடிக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் நிரவி தொகுதியில் பல்வேறு பகுதிகளில் சாலை மேம்பாட்டு மற்றும் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வரவிருக்கும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பணிகளை முடிப்பது குறித்த சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொம்யூன் ஆணையர், உதவிப் பொறியாளர் (AE), இளநிலைப் பொறியாளர் (JE) மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், நடைபெற்று வரும் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி பணிகளை தரமாகவும், உரிய காலக்கெடுவிற்குள்ளும் முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன