புதுச்சேரி

வில்லியனூர்: பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ. பி.ரவிக்குமார்!

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ரவிக்குமார் தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்ததுடன், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மானியத் தொகையையும் வழங்கினார்.

வில்லியனூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை எம்.எல்.ஏ. பி.ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாகவும் விரைவாகவும் தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0’ (PMAY 2.0) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டும் மானியத்தின் மூன்றாம் தவணைத் தொகையான ரூ.1,20,000-ஐ ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) முறையில் வங்கிக் கணக்கில் பெறுவதற்கான ஆணைகளை எம்.எல்.ஏ. ரவிக்குமார் வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். இந்நிகழ்வில் அரசுத் துறை இளநிலை பொறியாளர் மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன