காரைக்கால்

காரைக்காலில் 10 ஆண்டு கால மின்தடை பிரச்சனைக்கு தீர்வு: ₹50.44 லட்சத்தில் புதிய மின் கட்டமைப்பு பணிகள் தொடக்கம்!

காரைக்கால்: நிரவி – திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தொடர் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ₹50.44 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மின்கட்டமைப்பு பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நிரவி நாகூர் சாலை, நேதாஜி நகர், சுப்பையாப்பிள்ளை நகர் மற்றும் மதகடி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ₹50.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 124 மின்கம்பங்கள் நடப்பட்டு கட்டமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டன. இதன் தொடக்க நிகழ்ச்சி நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், வேளாண்மைத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜேஸ்வரன் மற்றும் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புதிய மின் கட்டமைப்பை முறைப்படி தொடங்கி வைத்தனர். இப்பணிகள் நிறைவடைந்ததன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் மின் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன