புதுச்சேரி

புதுச்சேரி துறைமுக வளர்ச்சி: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் இந்திய துறைமுகங்கள் சங்கக் குழு ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து, இந்திய துறைமுகங்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் பொதுப்பணி மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய துறைமுகங்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் யதின் பாட்டில் தலைமையிலான அதிகாரிகள் குழு, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, புதுச்சேரி துறைமுகத்தை விரிவுபடுத்துதல், சரக்குக் கையாளும் திறனை உயர்த்துதல் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த முக்கிய சந்திப்பின்போது புதுச்சேரி துறைமுக இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். இத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்போது புதுச்சேரி துறைமுகம் புதிய வர்த்தக வாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன