புதுச்சேரி

புதுச்சேரியில் 2 போலிப் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

இந்தியா முழுவதும் அங்கீகாரமின்றிச் செயல்பட்டு வரும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

யுஜிசி வெளியிட்ட பட்டியலின்படி, திலாஸ்பேட்டையில் செயல்படும் ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் மற்றும் திருக்கனூரில் உள்ள உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகியவை போலிப் பல்கலைக்கழகங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெறாதவை என்றும், யுஜிசி சட்ட விதிகளின்படி பட்டம் வழங்கும் அதிகாரம் இவற்றுக்கு இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முன் அதன் அங்கீகாரம் மற்றும் இணைப்புப் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாகச் சரிபார்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி வெளியிட்ட மாநில வாரியான போலிப் பல்கலைக்கழகங்கள் முழுப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன