புதுச்சேரி

முதுநிலை பல் மருத்துவப் படிப்பு: சென்டாக் 2-ஆம் கட்ட உத்தேச சேர்க்கை பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி, செப். 23: புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் மத்திய சேர்க்கைக் குழு (சென்டாக்), 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பல் மருத்துவம் (M.D.S.) படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட உத்தேச இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட உத்தேச இடஒதுக்கீடு பட்டியல் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் லாகின் விவரங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உத்தேச ஒதுக்கீட்டில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் தங்களது ‘Login Dashboard’-ல் உள்ள ‘GRIEVANCES’ பிரிவு வாயிலாக செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ இறுதி தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் (Provisional Allotment List) வெளியிடப்படும்.

மேலும், இந்த உத்தேசப் பட்டியல் வழிகாட்டுதலுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதால், இதை சட்டப்படி உரிமை கோர முடியாது. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை (Provisional Allotment Order) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த பின்னரே மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன