புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேதுவை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பு!

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு. சேது (எ) சேது செல்வத்திற்கு ஆதரவாகக் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவு பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் கு. சேதுவை ஆதரித்து, காயத்ரி ஸ்ரீகாந்த் மற்றும் சுந்தரி ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன