உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்ட தவணை நிதி உதவி: தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டம் 1.0 (PMAY) ஆகியவற்றின் கீழ் உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகரும், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. அன்பழகன் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிகளுக்கான தவணை நிதியுதவிகளை முறைப்படி வழங்கினார்.
சொந்த வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தினதும் மிக முக்கியமான அடிப்படை உரிமை என்றும், தொகுதி மக்கள் அனைவரும் தரமான கான்கிரீட் வீடுகள் பெறுவதை உறுதி செய்யும் பணியில் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவேன் என்றும் அவர் இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் சுதர்சன், இளநிலைப் பொறியாளர் உதயகுமார் மற்றும் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
