புதுச்சேரி காமராஜ் நகர் அலுவலகத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சந்தித்த நடிகர் பாண்டி ரவி!

புதுச்சேரி: தமிழ் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் பாண்டி ரவி, புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை அலுவலகத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு முற்றிலும் மரியாதை நிமித்தமாக நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து, பல்வேறு சமகால நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். பல்வேறு திரைப்படங்களிலும், பல முன்னணி தொலைக்காட்சி மெகா தொடர்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நடிகர் பாண்டி ரவி தனக்கென தனி நற்பெயரைப் பெற்றுள்ளார்.
காமராஜ் நகர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சினேகபூர்வ சந்திப்பு அப்பகுதியில் உள்ள தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான தகவல்களை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
