காரைக்கால்

காரைக்காலில் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை: மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் நேரில் புகார்!

காரைக்கால்: காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணக்கோரி, மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கனிடம் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தார்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்களும், வணிகர்களும், மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாகப் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஏ.குலோத்துங்கனைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், பொதுமக்களின் அவதியைப் போக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும், தடையற்ற மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன