புதுச்சேரி

புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க நாணயம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஷ் கோரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தமிழகத்தைப் போன்று ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ விக்னேஷ், அண்டை மாநிலமான தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். அதே வழியில், புதுச்சேரியிலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் அல்லது மோதிரம் வழங்கும் புதிய திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இத்தகைய திட்டம் எளிய குடும்பங்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் சமூகப் பாதுகாப்பையும் அளிக்கும் என்றும், முதலமைச்சர் மற்றும் அரசு நிர்வாகம் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன