புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: புதுச்சேரியில் சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி, செப். 8: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை மிகவும் அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாகவும் கொண்டாடுவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரிவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி.) கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.க்கள்), இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில், புதுச்சேரி இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார் மற்றும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்கள், ஊர்வலம் செல்லும் வழிகள், கரைப்பு நடைபெறும் கடற்கரைப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விழாவின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்துவது மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரால் விழாக்குழுவினருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன