தேசியம்

எரிசக்தி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்: எம்.பி. பி.வில்சன் பங்கேற்பு!

புது தில்லி: எரிசக்தி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் கலந்துகொண்டு துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், ‘தற்சார்பு மின்துறையின் வளர்ச்சியில் மின்துறை சார்ந்த சட்டப்பூர்வ அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்கு’ என்ற தலைப்பில் விரிவான விவாதம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மின்சார அமைச்சகம் மற்றும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் ஆகியவற்றின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய மின்துறை அமைச்சகத்தின் சார்பில் செயலாளர் பங்கஜ் அகர்வால், கூடுதல் செயலாளர் திவாகர் நாத் மிஸ்ரா, இயக்குநர்கள் சந்தோஷ் குமார், அருண் குமார் கார்க் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் தலைவர் மனோஜ் திரிபாதி, உறுப்பினர்கள் ஹர்ப்ரீத் சிங் மனோச்சா, பிஜேந்தர் சிங் நாரா, நிதி ஆலோசகர் வீரேந்தர் குல்ஹாரியா மற்றும் சிறப்புச் செயலாளர் அஜய் குமார் சர்மா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன