புதுச்சேரி

புதுச்சேரியிலும் பாமக ஆட்சி அமைவது உறுதி: மாநில அமைப்பாளர் மதியழகன் அதிரடி பேட்டி!

புதுச்சேரி, 07/09/2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக மாநில அமைப்பாளர் மதியழகன், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் இலக்குகள் குறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் வரும் 2031-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்று, புதுச்சேரியிலும் பாமக ஆட்சியைப் பிடிக்கும் வகையில் கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரியிலும் பாமக தலைமையில் மக்கள் நலன் காக்கும் ஆட்சி அமையும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது புதுச்சேரி முதலமைச்சராக உள்ள என்.ரங்கசாமி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், பாமகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே உண்மையாக வன்னியர் சமுதாய மக்களுக்கு உரிய உரிமைகளும் நலன்களும் முழுமையாகக் கிடைக்கும்” என்று குறிப்பிட்டார். இச்செய்தியாளர் சந்திப்பில் பாமக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன