காரைக்கால்

காரைக்காலில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் திருநாள் விழா: சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

காரைக்கால்:

புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் ஆசிரியர் திருநாள் விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகர் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் மருத்துவர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டு ஆசிரியர்களைப் பாராட்டி சிறப்பித்தார். மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

விழாவில், மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றிய காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன