காரைக்கால் தேவஸ்தானத்தில் அதிரடி மாற்றம்: புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமனம்!
காரைக்கால்: காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் – ஸ்ரீ நித்யகல்யாணி பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு, புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் – ஸ்ரீ நித்யகல்யாணி பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் தனி அதிகாரியாக இதுவரை விநாயகமூர்த்தி பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்கும் இத்தேவஸ்தான நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திடீர் அதிகாரி மாற்றம், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


