புதுச்சேரி

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு 5 மாத சம்பள பாக்கியை உடனே வழங்குக: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அவர், அவசர மருத்துவ சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் குடும்பச் சிரமங்களிலும் தவித்து வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஓட்டுநர்களின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசு தாமதமின்றி உடனடியாக நிலுவையில் உள்ள முழுச் சம்பளத்தையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பொதுமக்களுக்குத் தடையற்ற மற்றும் சிறப்பான அவசர மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இனிவரும் காலங்களில் ஆம்புலன்ஸ் சேவை முறையைத் தனியார்மயமாக்கி முறையாக நிர்வகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன