புதுச்சேரி

புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக தயானந்த் தெந்தோல்கர் நியமனம்: அரசு ஆணை வெளியீடு

புதுச்சேரி, செப். 04:
புதுச்சேரி அரசின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநராக தயானந்த் தெந்தோல்கர் நியமிக்கப்பட்டு முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (DPAR) சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், புதுச்சேரி வடக்கு பகுதி வருவாய் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த தயானந்த் தெந்தோல்கர் உடனடியாக உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் புதிய இயக்குநராக மாற்றப்பட்டு பொறுப்பேற்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் அரசு சார்புச் செயலாளர் எஸ். முருகேசன் இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை பிறப்பித்துள்ளார். இம்மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு, அரசின் அனைத்து தலைமைச் செயலக துறைகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன