காரைக்கால்

காரைக்காலில் புதிய டர்ஃப் விளையாட்டு மைதானம்: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

காரைக்கால், வரிச்சிக்குடி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் அரீனா’ (Winners Sports Arena) டர்ஃப் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, புதிய டர்ஃப் மைதானத்தை முறைப்படி திறந்து வைத்தார்.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) காரைக்கால் மாவட்டத் தலைவர் திரு. பி. தமிழ்மாறன் இந்த திறப்பு விழா நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் புதுச்சேரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ஜி.என்.எஸ். ராஜசேகரன் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்து தெரிவித்தார்.

இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், நவீன விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தித் தரவும் இந்த டர்ஃப் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன