தேசியம்

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கணபதி தரிசனம்!

மும்பை, : விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கணபதியை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட அவர், விநாயகர் சிலைக்கு மலர் தூவி தீபாராதனை எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இந்த வழிபாட்டிற்குப் பின்னர், நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ மங்கலமூர்த்தி கணபதி அருள்புரிய வேண்டும் என்று அமித் ஷா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் முக்கியத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன