புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளிக் கல்வித் தரம் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி அட்டை குறித்த இருநாள் பயிலரங்கம்!

புதுச்சேரி, செப். 15: புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் மற்றும் ‘பராக்’ (PARAKH) அமைப்பு இணைந்து, பள்ளிக் கல்வித் தர மதிப்பீட்டு கட்டமைப்பு (SQAAF) மற்றும் டிஜிட்டல் முழுமையான வளர்ச்சி அட்டை (HPC) குறித்த இருநாள் சிறப்பு பயிலரங்கத்தை புதுச்சேரியில் நடத்தின.

இப்பயிலரங்கில், புதுச்சேரி அரசு வளர்ச்சி ஆணையரும் பள்ளிக் கல்வித்துறை செயலருமான கிருஷ்ண மோகன் உப்பூ (IAS), பள்ளிக் கல்வி இயக்குநர் டி.மோகன் குமார், சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் கே.எழில் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கல்வித்துறை இணை இயக்குநர் டாக்டர் வி.ஜி.சிவகாமி தேவி, சிறப்பு பணி அதிகாரி டி.சுகுணா சுகேந்திர பாய், பராக் ஒருங்கிணைப்பாளர்கள் பூர்ணா, செல்வகுமார் உள்ளிட்ட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் திறன்களை பன்முக நோக்கில் முழுமையாக மதிப்பீடு செய்தல் மற்றும் மாணவர் மையக் கற்றல் முறையை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பள்ளித் தர மதிப்பீடு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி அட்டை மூலம் மாணவர்களின் கல்வித் திறனை துல்லியமாக கண்காணித்து வழிநடத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன