காரைக்கால்

காரைக்காலில் விளையாட்டுப் பள்ளி தொடங்க வேண்டும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!

புதுச்சேரி: காரைக்கால் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் காரைக்காலில் உடனடியாக விளையாட்டுப் பள்ளி (Sports School) தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ., காரைக்கால் பகுதி மாணவ, மாணவிகள் தடகளப் பயிற்சிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக, தனது முந்தைய கோரிக்கையை ஏற்று சிந்தெடிக் தளம் (Synthetic Court) அமைத்துக் கொடுத்த துறை அமைச்சருக்கு காரைக்கால் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், காரைக்கால் பிராந்தியத்தில் விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் ஏழை எளிய மாணவ விளையாட்டு வீரர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர, விளையாட்டுப் பள்ளி தொடங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே, காரைக்காலில் விளையாட்டுப் பள்ளி தொடங்குவதற்கான முறையான அறிவிப்பை அரசு நடப்பு கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என பேரவையில் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன