காரைக்கால்

காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பணி துவக்கம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச். நாஜிம் பங்கேற்பு!

காரைக்கால்: காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெயவீரபால ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமான பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணி துவக்க விழா விமரிசையாக நடைபெற்றது.

இத்திருக்கோயில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க நிகழ்வில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.ஹெச். நாஜிம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திருப்பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் பங்கேற்று ஆஞ்சநேய சுவாமியைத் தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில் கோயில் நிர்வாகக் குழு தலைவர் வழக்கறிஞர் இராம. வெற்றிச்செல்வன், செயலாளர் குமார் (எ) ஆர். கோவிந்தராஜ், பொருளாளர் திருப்பதி (எ) டி. பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான ஆன்மீக மெய்யன்பர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன