தட்டாஞ்சாவடியில் மாற்றுக்கட்சியினர் விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைவு: அசோக் ஆனந்தனுக்கு இளைஞர்கள் பேராதரவு!
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பேட் மற்றும் லட்சுமி நகர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தொகுதியில் மக்களுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் சேவகர் அசோக் ஆனந்தனின் பணிகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். அவரது தலைமையின் மீது முழு நம்பிக்கை வைத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அசோக் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில், புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தனின் மக்கள் நலப் பணிகளுக்கு நாளுக்கு நாள் இளைஞர்களிடையே ஆதரவு பெருகி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.



