புதுச்சேரி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகக் கொண்டாட்டம்!

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி எம்.பி. அவர்களின் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் சிறப்பு வழிபாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் திருவுருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி கலந்துகொண்டு பயபக்தியுடன் வழிபாடு நடத்தினார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகப் பணியாளர்கள், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன