புதுச்சேரி

புதுச்சேரி CGL தேர்வு 2025: சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை வெளியீடு – அரசு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி, 14/09/2026:

புதுச்சேரி அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட பட்டதாரி அளவிலான ஒருங்கிணைந்த தேர்வு (CGL 2025) மூலம் 8 விதமான பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இத்தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நேரில் ஆஜராக வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ள விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக புகைப்படங்கள் மற்றும் சுயசான்றொப்பமிட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சரிபார்ப்பின் போது தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket), பிறந்த தேதி சான்றிதழ், கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அசல் மற்றும் நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், துணை வட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியால் ஓராண்டுக்குள் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

OBC, MBC, EBC, BCM மற்றும் BT பிரிவினர் ‘கிரீமி லேயர்’ (Non-Creamy Layer) விவரம் அடங்கிய சான்றிதழையும், EWS பிரிவினர் 2024-25 நிதியாண்டிற்கான வருமானம் மற்றும் சொத்து மதிப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு நிர்வாகம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன