புதுச்சேரி

புதுச்சேரியில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை பதிவு முகாம்

புதுச்சேரி, செப். 15:
புதுச்சேரி மாநில சுகாதார முகமை (SHA) மற்றும் ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு முகாம் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி கோசப்பாளையம் மற்றும் காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) இந்த ‘ஆயுஷ்மான் வய வந்தனா’ அட்டை வழங்கும் முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டன. இதில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முதியோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தின் மூலம் 70 வயது நிரம்பிய அனைத்து முதியவர்களுக்கும் உயர் மருத்துவ சிகிச்சைகளுக்கான காப்பீட்டு வசதி உறுதி செய்யப்படுகிறது. முகாமில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு அட்டை பதிவிற்கான உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவ விழிப்புணர்வும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன