காரைக்கால்

காரைக்கால் தொழிற்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி: எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு!

காரைக்கால்: காரைக்கால் மேலக்காசாகுடி பகுதியில் செயல்பட்டு வரும் குளோரைடு தொழிற்சாலையில் வெல்டிங் பணியின் போது எதிர்பாராதவிதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்கால் மாவட்டம், மேலக்காசாகுடியில் உள்ள தனியார் குளோரைடு தயாரிப்பு தொழிற்சாலையில் பராமரிப்பு மற்றும் வெல்டிங் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தொழிலாளி கண்ணன் என்பவர் பலத்த தீக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அரசு அதிகாரிகளுடன் விபத்து நடந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விபத்துக்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, முழுமையான ஆய்வு அறிக்கை துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன