காரைக்கால்

மேல காசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளி தேவைகள்: எம்.எல்.ஏ. விக்னேஸ்வரனிடம் தலைமை ஆசிரியர் கோரிக்கை மனு!

காரைக்கால்: நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட மேல காசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் உள்ள மேல காசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பள்ளியில் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வி சூழலை மேம்படுத்தத் தேவையான அடிப்படைத் தேவைகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துக்கூறி கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தார்.

பள்ளியின் தேவைகள் மற்றும் மாணவ – மாணவிகளின் நலன் சார்ந்த அனைத்து அம்சங்களையும் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், இந்த மனுவினைப் பரிசீலித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன