காரைக்கால் வருகை தந்த முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்த புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களை, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அரசு முறைப் பயணமாக மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது, முதலமைச்சரை நேரில் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பளித்தார்.
இந்த சந்திப்பின்போது காரைக்கால் பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தொகுதி சார்ந்த முக்கிய நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்தித்தபோது முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

