புதுச்சேரி

உப்பளம் தொகுதி முஸ்லிம் கல்லறை தெருவில் ரூ.13.90 லட்சத்தில் சாலை, வாய்க்கால் பணிகள் தொடக்கம்: அன்பழகன் பூமி பூஜை!

புதுச்சேரி, செப். 10:

புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஸ்லிம் கல்லறை தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்குத் திட்டமிடப்பட்டது. அதன்படி, அங்கு எல் வடிவ வாய்க்கால் மற்றும் உட்புற சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளைத் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பூமி பூஜை செய்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

உப்பளம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் சீராக வெளியேறும் வகையில் எல் வடிவ வாய்க்கால் மற்றும் பொதுமக்கள் எளிதாகப் பயணிக்கும் வகையில் தரமான உட்புற சிமெண்ட் சாலை ஆகியவை ரூ.13.90 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளன. இப்பணிகளைத் துரிதமாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி உயர் அதிகாரிகள், துறைசார் பொறியாளர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன