விளையாட்டு

டூரண்ட் கோப்பை கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால் அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோப்பை வழங்கினார்!

புதுதில்லி: டூரண்ட் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால் அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் கோப்பையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். புதுதில்லியில் நடைபெற்ற இந்நிகழ்வில், டூரண்ட் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடிய ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்தித்துப் பாராட்டினார். தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க டூரண்ட் கோப்பையை சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால் அணி நிர்வாகிகளிடமும் வீரர்களிடமும் அவர் முறைப்படி வழங்கினார்.

ஆசியாவின் மிகத் தொன்மையான கால்பந்து தொடர்களில் ஒன்றான டூரண்ட் கோப்பையைக் கைப்பற்றிய ஈஸ்ட் பெங்கால் அணியினரின் கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு மிக்க ஆட்டத்திறனைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், எதிர்காலப் போட்டிகளிலும் வீரர்கள் தொடர்ந்து சிறந்து விளங்க தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன