விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: சின்னம் மற்றும் ஜெர்சியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிமுகப்படுத்தினார்!

சென்னை, செப். 09: தமிழகத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்கப்பட்டன. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கலந்துகொண்டு போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். மேலும், இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் கொடியினை அவர் வெளியிட்டார்.

தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக ஜெர்சியையும் (விளையாட்டுச் சீருடை) அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிமுகப்படுத்தி வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விழாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளம் வீரர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொணரும் முக்கிய தளமாக விளங்கி வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்சாகத்துடன் களம் காண உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன