புதுச்சேரி

புதுச்சேரி பாரதி பூங்காவில் எம்எல்ஏ விக்னேஷ் ஆய்வு: குழந்தைகள் விளையாடும் பகுதியில் உடனடி பாதுகாப்பு பணிக்கு உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கிய அடையாளமான பாரதி பூங்காவில், குழந்தைகள் விளையாடும் பகுதியில் நிலவி வந்த பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பாரதி பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், அங்குள்ள சிறுவர் விளையாட்டுப் பகுதியில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், இதனால் விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பூங்காவிற்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன், விளையாட்டு உபகரணங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை விரிவாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பழுதடைந்த உபகரணங்களை உடனடியாகச் சீரமைக்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் வகையில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த எம்எல்ஏவிற்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன