விளையாட்டு

புதுச்சேரியில் நடக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ தொடர்: இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடற்தகுதி பரிசோதனை முடிவுகளுக்கு உட்பட்டே அவர் களமிறங்குவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இந்த ஒருநாள் போட்டிகள் வரும் அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு எந்தவொரு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் (Centre of Excellence) தீவிர உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக முதுகுவலி மற்றும் பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்திருந்தார். இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டுள்ள பாண்டியா, புதுச்சேரியில் நடைபெற உள்ள இத்தொடர் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன