கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மருத்துவ நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை, செப். 10: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய நலிந்தோர் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் கீழ், நடப்பு மாதத்திற்கான நிதியுதவியை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய ரூ.5 கோடியை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக இட்டு, அதிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையைக் கொண்டு 2005 நவம்பர் மாதம் முதல் நலிந்தோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் பபாசி சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கியது போக, மீதமுள்ள ரூ.4 கோடிக்கான வட்டித் தொகையிலிருந்து தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுவரை நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் ரூ. 6 கோடியே 55 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் 8 நபர்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் மொத்தம் ரூ. 2,00,000 (இரண்டு லட்சம் ரூபாய்) உதவித்தொகையினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். பயனாளிகள் அலையாமல் இருக்கும் வகையில் இந்த நிதி தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)



