தமிழ்நாடு

காவலர் தினம்: சென்னை முழுவதும் சைபர் கிரைம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரம்!

காவலர் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நகரம் முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் விமரிசையாக நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறை வாத்தியக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் துறையின் 4 காவல் மண்டலங்கள் மற்றும் 12 காவல் மாவட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம்களில், சைபர் கிரைம் குற்றங்களைத் தடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாம்களில் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதுடன், போதைப்பொருட்கள் இல்லாத பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதற்கு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன