தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: அமைதியான கொண்டாட்டத்திற்கு சென்னை காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, செப். 10:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிலைகள் அமைத்தல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அமைதியான முறையில் சிலைகளைக் கரைப்பது தொடர்பாகப் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப., தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்தும் பல்வேறு பொது மற்றும் ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் நேரில் கலந்துகொண்டனர். பண்டிகைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், தீயணைப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகள், சிலைகள் நிறுவப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கும் போது காவல்துறையினரின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன