சென்னை லயோலா கல்லூரி நூற்றாண்டு விழா: புதிய கட்டிடத்திற்கு மார்டின் குழுமம் ரூ.1 கோடி நிதியுதவி!

சென்னையில் உள்ள புகழ்பெற்ற லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு மார்டின் குழுமம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புமிக்க கட்டிடத்தை, பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரி திருமதி நீனா கோத்தாரி, திருமதி லீமா ரோஸ் மார்டின் மற்றும் த்ரிலக்ஷா ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தனர்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த நிதியுதவி மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நீனா கோத்தாரி மற்றும் தமது குடும்பத்தினர் இணைந்து இக்கட்டிடத்தை திறந்து வைத்தது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



