தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிக பலத்த மழை பதிவு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதுச்சேரி, செப். 15: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 8:30 மணி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி காலை 8:30 மணி வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், குஜராத் பகுதி, சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக பலத்த மழை (Very Heavy Rainfall) பெய்துள்ளது.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஏனாம் பகுதி, கடலோர ஆந்திரா, தெலங்கானா, தென் உள் கர்நாடகா, கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை (Heavy Rainfall) பதிவாகியுள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.


